சகுனமா பாக்குறீங்க

தாத்தா : டேய்....இங்க வா...

பேரன் : என்ன தாத்தா?

தாத்தா : ஏண்டா நேத்து மண்ணெண்ணெய் வாங்க ரேசன் கடைக்கு போகமட்டேன்னுட்டியாமே?

பேரன் : அதில்ல தாத்தா...போகலாம்னுதான் கிளம்புனேன்...அதுக்குள்ளே ஒரு கருப்புப்பூனை குறுக்கே போய்டுச்சா... அதான் அப்பிடியே திரும்பிட்டேன்...

தாத்தா: அது போனா உனக்கு என்னடா...?

பேரன் : என்ன தாத்தா...ரெண்டு நாளுக்கு முன்னாடி மாமாவுக்கு பொண்ணு பாக்க கிளம்புனப்போ...குறுக்க பூனை வந்துடிச்சுன்னு நீங்க தான மறுநாள் போவோம்னு சொன்னீங்க...அத மாதிரித்தான் இதுவும்...உனக்கொரு சட்டம்...எனக்கொரு சட்டமா தாத்தா....

தாத்தா : அடேய்... அது நல்ல காரியத்துக்கு போகும்போதுதாண்டா அப்படி பாக்கணும்...

பேரன் : ம்ம்.... அப்போ மண்ணெண்ணெய் வாங்குறது கெட்ட காரியம்னு சொல்றீங்க... கெட்ட காரியம் செய்யக்கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்காங்க தாத்தா...

தாத்தா : எடுபட்ட பயலே.... ஒரு மண்ணெண்ணெய போயி வாங்குறதுக்கு இல்லாம பேச்சைப் பாரு அப்பிடியே அம்மாவை மாதிரியே....சும்மாவா சொன்னாங்க தாயைப் போல பிள்ளை,நூலைப் போல சேலைன்னு....

பேரன் : எம்மா...எம்மா...தாத்தா உன்கிட்ட ஏதோ பேசனுங்கிறாரு....

மருமகள் : (அடுப்பறையில் இருந்தபடியே...) என்ன மாமா...?

மாமனார் : அது ஒண்ணுமில்லேம்மா... ஒண்ணுமில்லை.. நீ வேலையைப் பாருமா

(தாத்தா அடிக்கக் கிளம்ப....பேரன் ஓட்டம் ....)

எழுதியவர் : உமர் ஷெரிப் (12-Mar-14, 9:26 pm)
பார்வை : 311

சிறந்த நகைச்சுவைகள்

மேலே