பலூன் சிரிப்பு ஹைபுன்

பலூன் சிரிப்பு {ஹைபுன்}
*
திருமண மண்டபத்திற்கு வெளியில் காற்றோட்டமாய் கூடி நின்று
சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள்.,நகைச் சுவையாய், அவர்கள்
பார்வையை வேறு வேறு திசையில் பாய விட்டுச் சிரித்துக்
கொண்டிருந்தார்கள். பலரும் பேசுபவர்களை வேடிக்கைப் பார்த்துக்
கொண்டே “ அப்படி என்ன தான் நகைச்சுவையாகப் பேசிக்
கொள்கிறார்கள்” என்று கேட்காமல், முகத்தை வேறொரு பக்கம்
திருப்பி வைத்துக் கொண்டுக் கடந்துப் போகிறார்கள்.
வேகவேகமாய் ஊள்ளிருந்து வெளியில் வந்தவர், அவர்களின்
சிரிப்பில் பங்குக் கொள்ள முயன்றார். அவரைப் பார்த்த போதே
பேசிக் கொண்டிருந்தவர்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டு.
கலர்கலராய் முகூர்த்தப் பட்டுப் புடவையில் சிரிப…சிரிப்….என்று
சத்தமிட்டுப் போகும் பெண்களின் மீதுப் பார்வைப் பதித்து,
அனைவரும் அமைதியானார்கள்.
குழந்தைகளின் கைகளில் இருக்கும்
பலூன்களின் பறக்கும் சிரிப்பை
வேடிக்கைப் பார்க்கிறது குரங்குகள்.

எழுதியவர் : ந.க.துறைவன் (14-Mar-14, 10:45 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 112

மேலே