சில புன்னகை முத்துக்களை
பனியில் நனைந்தன
மலரின் இதழ்கள்
அவள் இதழினில் விரிந்த
புன்னகை அழகினில்
கவிதையில் நனைந்தது
இதயம்
இதழ்களில் சிதறிக் கிடந்தன
வெண் பனி முத்துக்கள்
சிதறாமல் கலையாமல்
உருவாகி நின்றாள் சிலையாக
அவள் உள்ளே
இன்னும் சில புன்னகை முத்துக்களை
சிதறினாள் நெஞ்சினிலே !
முத்துக்கள்
பனியோ புன்னகையோ
இதழ்கள் எழுதும் இலக்கியமோ !
----கவின் சாரலன்