மரண வாசல் பகுதி 5

ஹேய்... என்ன இப்போ ? என்னாச்சி உங்களுக்கு எல்லாம் ? கேப்டன் என்னது இது ? எங்களுக்கு தைரியம் சொல்ல வேண்டிய நீங்களே இப்படி தொப்பியைக் கழட்டி தலக் குனிஞ்சி நின்னா…. நாங்கெல்லாம் எப்படி.... ?? முதல்ல நீங்க தொப்பியைப் போடுங்க ! உதயான்னா இப்போ நாமே எங்கே இருக்கோம் ? நம்ம பக்கத்துல வேறே ஏதாவது விமானம் போகுதான்னு பாருங்க. அவுங்கள CONTACT பண்ண முடியுதான்னு பாருங்க ?!

அரசு அண்ணன் நீங்கப் பாருங்க நிச்சயம் ஆண் குழந்தைத்தான் ! குட்டி அரசுவே WELCOME பண்ணே நீங்க ரெடியா இருக்கணும் MAN ! இப்படி சோர்ந்து போலாமா ? COME CHEER UP !

மீனாக்கா நீங்கப் போய் பணிமலரப் பாருங்க. மஞ்சரி நீ கண்டிப்பா பிரசந்த்ப் பார்ப்பே ! நம்பு ! நம்பிக்கைத்தான் வாழ்க்கை ! கண்ணத் துடைச்சிக்கிட்டு மீனாக்காவே FOLLOW பண்ணு !

கஸ்வின் கண்டிப்பா நீ ஆசைப்பட்ட மாதிரியே CANDLE LIGHT DINNER ல பனிமலர் கிட்டே உன் லவ்வே சொல்லலாம். அதுக்கு நீ இப்போ திடமா இருக்கணும். COME I GIVE YOU HUG ! CHEER UP ! GET BACK TO WORK !

அனைவரையும் ஒரு வழியாய் சமாதானப்படுத்தி அவர்களின் எண்ணத்தை வேறு திசையில் திருப்பி விட்டு அருணாச்சலத்தின் பக்கம் திரும்பினாள் தனிஷா.

அங்கிள்.. நீங்க மட்டும் ஏன் இங்கயே நிக்கறிங்க ? போங்க போய் வேலையைப் பாருங்க !

சிரித்தவாறே சொன்னாள் தனிஷா.

தனிஷா, நீ எல்லாரையும் பொய்யா சமாதானப்படுத்திருக்க.... ஆசைக் காட்டி மோசம் பண்ணிருக்கே ! நாமே யாரும் உயிரோடு திரும்பப் போறதில்லை ! அதுதான் உண்மை !

என்றார் அருணாச்சலம்.

என்னய்யா பெரியா சாவு ?? சாவார நாள் தெரிஞ்சிட்டா வாழ்ற நாள் நரகமாயிரும் ! இப்போதான் கல்யாணம் ஆனா புது மாப்பளை ! அப்பாவாகப் போற ஆசையிலே முதல் பிள்ளைக்காகக் கத்திருக்கற ஒரு ஆம்பள ! இனி வாழ்ற வாழ்க்கை அவன்கூடத்தான்னு கனவுக் கண்டு வேலைக்கி வந்திருக்கறப் பொண்ணு !

இனி வாழவே முடியாதே இப்பையேச் சொல்லிடுவோம்னு காதலைச் சொல்லி கெஞ்சர பையன் ! எங்கே செத்துப் போய்டுவோமோனு பயந்துப் போயிருக்கற சின்னப் பொண்ணு ! பொண்ண நல்லப் படியா கட்டிக் கொடுக்கனுங்கற பொறுப்பான எண்ணத்த மனசுல வெச்சிக்கிட்டு நம்பக் கூட இங்க இதே கப்பையிலே வீட்டுக்கு போவோமா இல்லையானு தெரியாமத் தவிச்சிகிட்டு இருக்கற ஒருத் தாய் !

கடமையே சரியா செய்ய முடியலே ! கண்ணியம் தவறிட்டோம்னு தலைக் குனிஞ்சி நிற்கற ஆளு ! என்னய்யா தப்பு பண்ணாங்க இவுங்கெல்லாம் ? என்ன தப்பு பண்ணாங்க ?? இவுங்க மட்டும் இல்லே !

தோ.... இந்த விமானத்துல நம்மக் கூட கப்பக் கோளாறான விசியம் தெரியாமலையே பயணம் செஞ்சிக்கிட்டு வராங்களே 250 பேறு ! அவுங்கலாம் என்னையா பாவம் பண்ணாங்க ?! விசியம் தெரிஞ்சா என்னாகும் தெரியுமா ?? நம்ப staff வே சாகப் போறோம்னு மூஞ்சிய உம்முன்னு வெச்சிக்கிட்டு இருந்தா ! கப்பையில இருக்கற 250 பேருக்கு யாரு தைரியம் சொல்றது ?!

உயிரைக் கையிலைப் பிடிச்சாலும் போழச்சிர்வோம் ! வாழ்ந்திடுவோம்னு ! ஒரு சின்ன தீப்பொறி அளவு நம்பிக்கைப் போதும் ! கண்டிப்பா ஏதாவது ஒரு மண்ணுல போய் பத்திரமா சேர்ந்திடுவோம் !

இந்த நம்பிக்கைக்கு பேருத்தான் ஆசையைக் காட்டி மோசம் பண்றதுனா ?! ஆமா, நான் ஆசைக் காட்டி மோசம் தான் பண்ணிருக்கேன் ! அனாவசியமான ஆசைகளை அவுங்க மனசுல தூண்டி விட்டிருக்கேன் ! வாழனும்ங்கர ஆசையத் தூண்டி விட்டிருக்கேன் !

ஆவேசமாய் நெருப்பாக தன் ஆதங்கத்தைக் கொட்டி அவ்விடத்தை விட்டு விருட்டென வெளியேறினாள். அருணாச்சலம் அதிர்ந்து நின்றார்.


வாசலை நெருங்கும் ........

எழுதியவர் : தீப்சந்தினி (15-Mar-14, 4:06 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 165

மேலே