நாக்கு

வாயில் வசிக்கின்றது
உமிழ் நீரில் இருக்கின்றது
பல சமயங்களில் பிறர்
உணர்வை சிதைக்கின்றது...

சொல்லால் அம்பு தொடுக்கும்
ஐம்புலன்களின் ஒன்று
சொற்களையும் சரலமாய்
அள்ளித் தெளிக்கும்...

உமிழ் நீரிலே நீராடுகிறது
நினைத்ததுமே வெளிவருகிறது
எலும்பினை கொண்டிராத ஜாதி..
உடலிலே ஒரு பாதி...

பற்கள் சுற்றி காவலிருக்க
சுவை முற்களும் மேலிருக்க
எளிதிலே உணர்ச்சி வயப்படும்
ஒரு வியாதி...

உணவை அரைக்க உதவும்
நரம்பில்லா கருவி
பற்களை தாண்டி வந்து
கொட்டிடும் குளவி...

காவலிருக்கும் பற்களையும்
கடைக்கண் பார்வையால்
ஏமாற்றி விட்டு...

சத்தமும் இன்றி..
இரத்தமும் இன்றி..
யுத்தமும் இன்றி..
காயப்படுத்தும் வித்தை
கொண்ட கெட்டிக்காரன்...

இயற்கை தந்த ஆயுதம்
உறைக்குள்ளே புகழிடம்
என்றும் இருட்டறை தான்
இதன் உறைவிடம்...

ஆறடி உடலுள்ள என்னையே
அறையடி உடலால் சாய்க்க
தீக்குச்சி கூட இல்லாமல்
தீ மூட்டி விட்டது...

நன்றி உள்ளது, நஞ்சும் கொண்டது
அதனால் தான் என்னவோ
வாயினுள் அடைபட்டுள்ளது...

தன் கட்டுப்பாட்டில் எப்படி
வைத்திருப்பது என்பதே
மனிதன் கொண்டுள்ள
பெரும் கவலை...

எழுதியவர் : எம். ஏ. அஷ்ரப் ஹான் (15-Mar-14, 4:31 pm)
Tanglish : naakku
பார்வை : 505

மேலே