ஒரு இந்தியக் குடிமகன் புலம்பல்

ராப்பகலா உழைச்சு
தினம் தினமும் களைச்சு
வேட்டியெல்லாம் கிழிஞ்சு
இரத்தமெல்லாம் உறைஞ்சு

கொட்டும் மழையாய் வியர்வை
நித்தம் நித்தம் நனைஞ்சு
பட்டினி மட்டும் தீரல
பட்டும் கூட மாறுல

குட்டக் குட்ட குனுஞ்சு
பார்வை கூட சுருங்கி
ஒட்டு துணியும் தொலைஞ்சு
வட்டத்தில் சிக்கி தவிக்கும் வாழ்க்கையடா

பட்டம் படிக்கவில்லை
பாரினில் நடப்பதும் தெரியவில்லை
நித்தம் நித்தம் சுருங்கி
சத்தம் மட்டும் குறையவில்லை

எத்தனை பேரு சொன்னாலும்
புத்தியில் மட்டும் ஏறல
பயபக்தியோட கிடக்கிறேன்
ஓட்டை போட்டு தெருவில் நிற்கிறேன்

எழுதியவர் : கனகரத்தினம் (16-Mar-14, 7:23 am)
பார்வை : 292

மேலே