எம லோகத்தில் ஒரு உரையாடல்
எம லோகத்தில் ஒரு உரையாடல்
---------------------------------------------------
எமன் : என்ன சித்ரகுப்தா பூலோகத்தின்
பாவ-புண்யங்கள் கணக்கெல்லாம்
சரிவர எழுத படுகின்றதா இல்லை
ஏதாவது குறையுண்டா ? சொல்லும்
சித்ரகுப்தன்: தர்மராஜா அவர்களே ;தங்களுக்கு
தெரியாதது ஒன்றும் இல்லை
கிருத,திரேதா,த்வாபர யுகங்களில்
மக்களிடையே பாவங்கள் குறைவாய்
உலாவி வந்தன .பாவிகள் எண்ணிக்கை
எழுதுவதில் சிரமம் ஏதும் இல்லாமல்
இருந்தது.
அய்யோ இந்த கலியுகத்தில் வினாடிக்கு
பல கோடிக் கணக்கில் நடக்கின்றது
இதை நபர்-நபர் கணக்கு முறையில்
வரவு வைத்து எழுத புத்தகம் போத
வில்லை, என் கீழ் ஆட்களும்
போத வில்லை மகாராஜ்.
எமன்: சரி சித்திரகுப்தா இதற்க்கு என்ன
வழி யோசித்தீரா ?
சித்ரா: மகாராஜா இதற்கு எனக்கு ஒரு உபாயம்
தோன்றுகிறது .பேசாமல் பூலோக
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஒரு
இண்டேன்ட் கொடுத்து விடலாம் சில
மெகா கணினி களுக்கு ;இவற்றின்
உதவியோடு இந்த பாவ கணக்குகளை
சீராக எழுத முடியும் சேகரித்து வைக்க
முடியும் .ஆனால் இதில் ஒரு சிக்கல்
கணினியுடன் உலகத்தில் இருந்து சில
பொறியாளர்களும் தேவை அதை
நமக்கு இயக்கிக் காட்ட ; "ஆன் டூர் "
சிலரை இங்கு அசிதுக்கொள்ளலாமா?
மகாராஜா, சொல்லுங்கள் ;ஆனால்
பின்பு அவர்களை திரும்பி கீழே
அனுப்ப வேண்டுமே?
எமன் : வேறு வழி இல்லை . "ஒன் டைம் " மேனியில் சிலரை அசிதுகொள்ளுங்கள்;
மறக்காமல் அவர்களை திரும்பி
அனுப்பிவிடுங்கள் .
"உங்கள் மனுக்கு " அனுமதி சித்திரகுப்தா
நீர் போகலாம்
சித்ரா: சரி மகாராஜா அப்படியே
----------------------