முறைமாமன் புலம்பல்

ஒத்தையடி பாதையிலே
ஒய்யாரமாய் போறபுள்ள
பக்கத்தில் நானிருந்தும்
பார்க்காமல் போவதெங்கே?

அந்தி வரும் நேரத்திலே
முந்திக்கொண்டு போறபுள்ள
முறைமாமன் நானிருக்க
முறைத்துக்கொண்டு போவதெங்கே?

கண்டாங்கி சேலை கட்டி
கட்டழகா போறபுள்ள
அத்தமகன் சொல்லும் சொல்லை
கேட்காமல் போவதெங்கே?

மல்லிபூ கொண்டைக்காரி
மரிக்கொழுந்து உடம்புக்காரி
மகராஜன் நானிருக்க
மயங்காமல் போவதெங்கே?

பத்து நாளா தூக்கமில்லை
பாவி உந்தன் ஏக்கத்தில
கண்ணு ரெண்டும் சிவந்திருக்கே
காணாமல் போவதெங்கே?

உன்ன நெஞ்சுக்குள்ள வச்ச
என்ன
போசிக்கிவிட்டு போகிரியே
கண்டும் காணாம
கண்ணாம்பூச்சி காட்டுறியே

கொஞ்ச நேரம்
நில்லு புள்ள
பேசி ரொம்ப நாளாச்சு

இந்த புதிகெட்டவன்
புலம்பலை கேட்டு
அந்த வானம் கூட
கருத்திருச்சு

வைகைமணி

எழுதியவர் : வைகைமணி (18-Mar-14, 1:20 pm)
Tanglish : muraimaman pulambal
பார்வை : 167

மேலே