கடல் தாண்டிய காதல்
கடல் தாண்டிய காதல்!
என் கண்ணே கண்ணே நீ பொன்னே பொன்னே
உன்னை தந்தால் முத்தம் உயிர் ஆறும் சித்தம்
என் கண்ணே கண்ணே நீ பொன்னே பொன்னே
உன்னை தந்தால் முத்தம் உயிர் ஆறும் சித்தம்
நிழலோடு கோர்த்து நெஞ்சோடு சேர்த்து
தழு விடத்தான் மனம் தேடுதே!
நினை வதில் வாடுதே!
உன்னோடு பேசி உன் மார்பு வீழ
என் னெண்ணம் பசியாகுதே!நாளும் அதுகூடுதே!
தேன் கிண்ணம் நீயோ ததும்பலை நானோ
வித்தை ஆடும் ஆட்டம் ஆட துள்ளாடுதே
நான் வாறேன் ஆச்சு நாளாகிப் போச்சு
வானம் ஏறும் காலம் நோக்கி எண்ணாடுதே!
என் கண்ணே கண்ணே நீ பொன்னே பொன்னே
உன்னை தந்தால் முத்தம் உயிர் ஆறும் சித்தம்
என் கண்ணே கண்ணே நீ பொன்னே பொன்னே
உன்னை தந்தால் முத்தம் உயிர் ஆறும் சித்தம்
ஆசைப் பொருள் வேண்டி மயக்கத்தில் அலைந்தேனே
ஆசை உயி ரென்று அறிவுனை உணருதே!
மண்ணிலேது மிச்ச மோடிரத்தினம் உன்னைவிட
மனம் நிறை வாழ அணை போதுமே!
இந்த மண்மீதில் தான் சொந்தம் காதலாகுமே
அந்த உறவாகுமோ என்றும் பொருள் போதுமோ!
வந்து உன் மடியிலே நான் நாள் களிக்கவே
வாஞ்சை யால் ஆறினேன் உயிர் உன் சொந்தமே!
என் கண்ணே கண்ணே நீ பொன்னே பொன்னே
உன்னை தந்தால் முத்தம் உயிர் ஆறும் சித்தம்
என் கண்ணே கண்ணே நீ பொன்னே பொன்னே
உன்னை தந்தால் முத்தம் உயிர் ஆறும் சித்தம்
நிழலோடு கோர்த்து நெஞ்சோடு சேர்த்து
தழு விடத்தான் மனம் தேடுதே!
நினை வதில் வாடுதே!
உன்னோடு பேசி உன் மார்பு வீழ
என் னெண்ணம் பசியாகுதே!நாளும் அதுகூடுதே!
தேன் கிண்ணம் நீயோ ததும்பலை நானோ
வித்தை ஆடும் ஆட்டம் ஆட துள்ளாடுதே
நான் வாறேன் ஆச்சு நாளாகிப் போச்சு
வானம் ஏறும் காலம் நோக்கி எண்ணாடுதே!
கொ.பெ.பி.அய்யா.