சிந்திக்க மட்டுமல்ல வாழ்க்கைக்கும்----அஹமது அலி---
ஒருவன் அறிஞனாவதற்கு என்னென்ன அறிந்திருக்க வேண்டும் என அறிவின் சிகரம் ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களிடம் ஒருவர் கேட்டார்.
அதற்கு ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் இவ்வாறு பதிலுரைக்கிறார்கள்...
ஒருவன் அறிஞனாவதற்கு 8 விடயங்களைப் பற்றி அவன் அறிந்திருக்க வேண்டும்!
1. எது அவசியம்
2.எது மிக அவசியம்
3.எது கஷ்டம்
4.எது மிக கஷ்டம்
5. எது நெருக்கம்
6.எது மிக நெருக்கம்
7. எது ஆச்சர்யம்
8 எது மிக ஆச்சர்யம்
இந்த எட்டு விடயங்களை தெரிந்திருக்க வேண்டும் என பதில் அளித்தார்கள்..
இதற்கு விளக்கம் கேட்ட போது இவ்வாறு விளக்கமளித்தார்கள்.
1.எது அவசியம்?
இறைவன் இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் படைத்தது நமக்காக..ஆனால் நம்மை அவன் படைத்தது அவனை வணங்குவதற்காக..
இறைவனை வணங்குதல் அவசியம் என அறிய வேண்டும்!
2.எது மிக அவசியம்?
பாவங்களிலிருந்து விலகுவதும், அதனை விட்டு விடுவதும் மிக அவசியம்!
3.எது கஷ்டம்?
இறந்த பின் மண்ணறை வாழ்க்கை 3"6" நமக்கு கஷ்டம் என அறிய வேண்டும்!
4.எது மிக கஷ்டம்?
கோடி கோடியாக செல்வம் சம்பாதித்து வைத்திருந்தாலும் மண்ணறைக்குச் செல்லும் போது ஒரு பொருளைக் கூட எடுத்துச் செல்வது மிக கஷ்டம் என அறிய வேண்டும்!
5.எது நெருக்கம்?
உலக முடிவு நாள் நெருக்கம் என்பதை அறிய வேண்டும்!
6.எது மிக நெருக்கம்?
நம் ஒவ்வொருவருக்கும் மரணம் மிக நெருக்கம் என்பதை அறிய வேண்டும்!
7.எது ஆச்சர்யம்?
இந்த உலகம் ஒரு ஆச்சர்யம் என்பதை அறிய வேண்டும்!
8.எது மிக ஆச்சர்யம்?
நிலையற்ற இந்த உலகத்தின் மீது பேராசை படுவது மிக ஆச்சர்யம் என்பதை அறிய வேண்டும்!