யாருக்காக

தென்றலே நீ தோட்டத்துக்காக
தோட்டமே நீங்கள் மலருக்காக
மலர்களே நீங்கள் யாருக்காக ?

அந்தி வான அழகே நீ மாலைக்காக
மாலைகளே நீங்கள் காதலுக்காக
காதலே நீங்கள் யாருக்காக ?

இரவே நீ நிலவுக்காக
நிலவே நீ ஒளி தருவதற்காக
ஒளி தரும் நிலவே நீ யாருக்காக ?

எல்லாம் ஒரே குரலில் சொன்னது
கவிஞனே எல்லோரும்
உனக்காகத் தான் !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Mar-14, 10:32 pm)
Tanglish : yarukkaga
பார்வை : 98

மேலே