குடிமது நாட்டிற்கு நன்று
வேண்டாம் மது வேதனை அது
வேடிக்கையாவது வேட்டியிழந்து
உன்னை பெற்றெடுத்த மனமும்
உன்னால் பெற்றெடுத்த மனமும்
உயிரோடு மரிக்கும் மது வேண்டாம்
தூக்கமில்லை விடிந்துவிட்டது
துள்ளிகுதித்து முதலாம்வனாய்
இவன் இந்நாட்டின் மூத்த குடிமகன்
அவள் துக்கம் விளக்க ஆளில்லாது
காத்திருப்பிலேயே விடிந்துவிட்டது
நாட்டின் முதுகெலும்பு நாங்கள்
அரசு கருவூலத்தை நிரப்புகிறோம்
அக்கறையான அரசே அக்கறைகொடு
சில மணிநேர சேவைதனை திருத்தி
முழுநாள் சேவையாய் மாற்றிவிடு
மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு
அடிக்கோடிட்டே விற்கிறது அரசு
கையிலிருக்கும் அறைக்காசையும்
அவசரமாய் தட்டிப்பறிக்கும் அவலம்
எங்கள்மீது அரசுக்கு கவலையில்லை
என் அரசுக்குகொரு வேண்டுகோள்
எச்சூழலிலும் மதுவை நிறுத்தாதே
சுயமிழந்து நாங்கள் இருக்கும்வரை
சுகமாகவே அதிகார போதையில் நீ
கேட்பார்யின்றி நீந்தி திளைக்கலாம்
வரலாம் ஏன் வரக்கூடாதே என்ன
வரும் தேர்தலின் அறிக்கைகளில்
குடித்து குடித்து இறந்த குடிமகனின்
மனைவியின் உள்ளத்துயர்துடைக்க
மறுமணம் செய்துகொள்ள சிறந்த
ஒரு குடிமகனை அரசே தருமென்று!!
வேண்டாம் மது வேதனை அது
வேடிக்கையாவது வேட்டியிழந்து
உன்னை பெற்றெடுத்த மனமும்
உன்னால் பெற்றெடுத்த மனமும்
உயிரோடு மரிக்கும் மது வேண்டாம்
என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...