கோப அணலால் சிவந்த சொன்னது

சுட்டெரித்தாய்..!
உயரம் குறைத்தாய்..!
ஊதி தள்ளி விட்டு ஒழிந்தான் என்று
எண்ணிச் சிரிக்கிறாயா..!
முட்டாளே..!
உன் சுவாசக் குழாய்குள் தான்
தேங்கிக்கிடக்கிறேன்..!
உன் இதயத்தை இயங்காது
செய்து விடுவேன் ஒரு நாள் என்பதை
சிறிதளவாவது சிந்தி..!என்று கோப அணலால் சிவந்த "சிக்ரெட்" சொன்னது..!

எழுதியவர் : Jaya Ram Kumar (21-Mar-14, 10:56 am)
பார்வை : 96

மேலே