மரண வாசல் பகுதி 7

கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு மூச்சை நன்றாக உள் இழுத்து நின்றாள். விமானம் லேசாய் குலுங்கியது. கண்களை இறுக மூடி
திறந்தாள். முகத்தை புன்னகை பூத்தாற் போல் வைத்துக் கொண்டு பெண்கள் கழிப்பிடம் அறைக் கதைவைத் திறந்து வெளியில் வந்தாள்.

நேராய் பயணிகளின் இருப்பிடத்தை நோக்கி சென்றாள். விமான ஒலிப்பெருக்கியில் கேப்டன் ஹரி சந்திரனின் குரல் ஒலித்தது.

GOOD NITE EVERYONE !

பயணிகள் அனைவரும் உறங்க ஆயோத்தமாயினர். பயணிகள் ஒவ்வொருவராய் கடந்து வந்துக் கொண்டிருந்தாள் தனிஷா.

இப்போ GOOD NITE என்ன அவசியம் ?

ஒரு குரல் முன்னோக்கிய அவள் பதங்களை பின்னோக்கியது. எட்டிப் பார்த்தாள் குரலின் சொந்தக்காரனை. மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தான். சிவப்பு என்று சொல்ல முடியாது ஒருவித மாங் கலரில் இருந்தான்.

அவன் முன்னே வந்தவள், ஏதாவது உதவி வேணுமா சார் என்றுக் கேட்டாள்.

அதற்கு அவன் இப்போ ஏன் குட் நைட்னு கேட்டேன் என்றான்.

தனிஷா, சிரித்துக் கொண்டே சார் நம்ப பயணம் ஆல்மோஸ்ட் 13 ஹவர்ஸ் அதுல இப்போதான் ஒரு ஹவர்ஸ் டிராவல் பண்ணி இருக்கோம். பயணிகள் உங்களுக்கு அலுப்பு தட்டாம இருக்கத்தான் தூங்க சொல்றோம். அவ்ளோதான். நீங்களும் தூங்குங்க சார். குட் நைட்.

என்று சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் தனிஷா. பயணிகளின் அமரும் பகுதியை விட்டு வெளியேறி அந்தப் பகுதியின் நடுவில் இருக்கும் திரையை இழுத்து சாத்தி விட்டு அடுத்தப் பகுதிக்கு செல்ல முனைந்தப் போது, சற்று முன் கேள்வி கேட்ட ஆடவன் அவளைப் பின்தொடர்ந்து வந்து அவளுக்கு பின்னால் நிற்பது தெரிந்தது.

மீண்டும் சிரித்த முகத்தோடு SIR PLEASE GET BACK TO YOUR SIT SIR என்றாள்.

எழுதியவர் : தீப்சந்தினி (22-Mar-14, 1:49 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 140

மேலே