அரசாங்க அராஜகவாதிகளே

சட்டத்தை காப்பாற்ற
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட
சமதர்மம் உருவாக
உருவானது காவல்துறை .......

இருக்கின்ற மனிதருக்கும்
இல்லாத மனிதருக்கும்
பொதுவான நியாயம் தர
பிறந்ததோ காவல்துறை .....

பயந்துபோன மனிதரெல்லாம்
பாதுகாப்பு கேட்டு இங்கு
அடைக்கலமாய் வந்த துறை
இது அனைவரையும் காத்த துறை .....

நிலை இன்று மாற்றிடுமே
நிதி அதனை மாற்றிடுமோ
காவல்துறை அடிப்படையை
மறந்து இன்று நடந்திடுமோ .......

பாதுகாப்பாய் இருந்த துறை
பாதுகாக்க மறந்திடுமா
பணம் ஒன்றால் நிலை மாறி
பாதங்கங்கள் செய்திடுமோ .......

பாதுகாப்பு கேட்டுப்போன
பலபெண்கள் கெட்டுபோனார்
பாலியல் தொல்லையாலே
அவர் சிக்கி மாண்டு போனார் ........

தீங்கு செய்யும் தீயவரை
தாங்கி நிற்கும் காவல் துறை
மாதம் வரும் மாமூளால்
மங்கிப்போச்சு நீதி இங்கு .......

கொலைகாரன் நண்பனாவன்
குடும்பஸ்தன் எதிரியாவான்
காசுதானே இங்கு பேசும்
கருணை எல்லாம் இங்கு தோற்கும் ......

புனிதமான இடம் இதனை
பலர் புனிதமின்றி நடத்திடுவார்
கோவில் போன்ற இடம் இதிலே
அவர் குடித்து விட்டு உழைத்திடுவார் .......

திருடுபோன காசை மீட்க
மனு கொண்டு போகையிலே
இருந்த காசும் திருடு போச்சு
காவல்துறையின் செலவாய் ஆச்சு .....

நீதி கேட்டு சென்ற இடம்
இன்று நியதி கேட்டு மாறிடுமே
காவல் துறை வாசல் தன்னை
மக்கள் மிதிக்க பயன்திடுமே ......

குற்றவாளி மனிதரெல்லாம்
குடும்பமாய் பழகிடுவார்
குற்றமற்ற மனிதர் அங்கே
கூன் குறுகி நின்றிடுவார் ......

உண்மையான உழைப்பாலே
உயர்ந்திடவே மறந்திடுவார்
குறுக்கு வழி புத்திகொண்டு
குற்றம் பல செய்திடுவார் .....

மக்களையே காப்பதற்கு
ஆனதிந்த காவல்துறை
அவர்களையே வஞ்சித்து
ஆடுதிந்த காவல்துறை .....

சிலர்செய்யும் தவறாலே
பலர் பேறும் கெட்டிடுமே
சீரழியும் துறையினிலே
காவல்துறை சிக்கிடுமே .......

வருந்தவேண்டிய விஷயமிது
வருத்தம் கொள்ளும் நேரமிது
நிலை இதனை மாற்றிடவே
பலர் முயலும் காலமிது .....

அரசாங்க ரௌடிஎன்று
பலர் சொல்லும் நிலைமாற்றி
பயன் தருமோ காவல் துறை
அந்த பழி போக்குமா காவல் துறை ......

எழுதியவர் : வினாயகமுருகன் (23-Mar-14, 10:38 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 305

மேலே