தேர்தல் வந்தாச்சு

தேர்தல் வந்தாச்சு
திருவிழா போலாச்சு
இல்லாதவர் கையில் கூட
இருப்பிருக்கும் நேரமாச்சு .....

பிரியாணி பொட்டலமெல்லாம்
இலவசமாய் கிடைக்குதிங்கே
சாராய சாக்கடையோ
சாலையாய் ஓடுதிங்கே .......

குடித்துவிட்டு போதையிலே
கொடிபிடிப்பார் குடிமகன்கள்
கோஷமெல்லாம் சொல்லிக்கொண்டு
அவர்திரிவார் பின்னாலே .....

காவி கட்டும் ஆண்டிக்கும்
புது துணிகள் கிடைத்திடுமே
காசுபணம் அவர்பய்யில்
அவ்வேளை நிறைந்திடுமே ......

அதிசமாய் அமைச்சர்களோ
அன்றாடம் வருகின்றார்
அவர்களின் வணக்கத்தால்
அனைவரையும் தொழுகின்றார் ......

கரும்புள்ளி ஒன்றுக்காய்
கைதனையே மதிக்கின்றார்
வாக்கு என்னும் பிச்சைக்காக
பொய் மழையை பொழிகின்றார் ......

வெள்ளை வேட்டி உடையெல்லாம்
அழுக்காகும் நேரமிது
குளிரூட்டு அறையெல்லாம்
ஓய்வெடுக்கும் காலமிது ......

குற்றவாளி மனிதரெல்லாம்
கும்பிட்டால் வேட்பாளர்
உத்தமராய் மாறிட்டு
ஒட்டுதனை கேட்டிடுவார் ......

அரசியல் என்னும் சாக்கடையில்
சங்கமிக்கும் கூட்டணிகள்
கொள்கைகளை மறந்துட்டு
கோடிக்காக கைகோர்க்கும் ......

நிலைமை உணரு மானிடமே
கேள்வி கேளு தமிழினமே
உண்மையான மனிதருக்கே
ஒட்டு போடு நம்மினமே .......

வார்த்தைகளே நம்பாதே
வாக்குகளை இழக்காதே
கட்சிகளை மறந்துவிட்டு
இட்டிடுவீர் வாக்குகளை ......

நீர்தரும் தீர்ப்பாலே
தலை நிமிரும் தமிழகமே
வரலாறு படைத்திடவே
வாக்குகளை அளித்திடுவீர் ......

எழுதியவர் : வினாயகமுருகன் (23-Mar-14, 10:58 am)
பார்வை : 294

மேலே