அவளும் நானும்

அன்னையின் அருகில்
அமர்ந்து இருந்தவள்
என்னைப் பார்த்துச்
சிரித்து இருந்தாள்
சின்னக் கண்களைச்
சிமிட்டிச் சிமிட்டி
எந்தன் மனதில்
சாறு பிழிந்தாள்.

அச்சம் இல்லாமல்
என்னை நோக்கி
உச்சுக் கொட்டிப்
பார்க்கச் செய்தாள்
எச்சில் படுத்தி
உதடுகள் நனைத்தாள்
சிரித்துச் செல்லமாய்
சிணுங்கி வந்தாள்.
.

நானொன்று உங்களைக்
கேட்க வேண்டும்
சரியா சரியா
சொல்லெனச் சொல்லி
”அவளை அவள்
வீட்டுக்கு அனுப்பு;
கடைக்குக் கூட்டிச்
செல்வது எதற்கு?

பெண்ணின் மகளும்
பிள்ளையின் மகளும்
எனக்கு ஒன்றென்று
தெரியாத சிறுமி
தாத்தா பாசத்தை
பங்கு போடுவதை
ஆறாமல் அப்படி
அழுது கேட்டாள்.
.
கெட்டவள் அவளை
பிடிக்காது எனக்கு”
ஓட்டங் கடித்து
ஓலம் இட்டாள்;
பொறாமை தன்னை
போக்கிட எண்ணி
சரிடா செல்லம்
சாரிடா என்றேன்.

.

.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ். (26-Mar-14, 11:05 am)
பார்வை : 189

மேலே