அவன் பறந்து போனானே

நீங்கள் புறப்பட்ட சமயத்தில்
பூப்பூத்த புன்னகை இன்று
உங்கள் புகைப்படத்திற்கு
பூ மாலையாய் சூட்டியுள்ளேனே ...
பொட்டிட்ட விரலையும் காணலை
பூவிட்ட கூந்தலையும்
அள்ளி முடியலையே !
போனவர் திரும்புவார் என்று
பொய்யான நம்பிக்கை மட்டும்
என்னுள் புதைந்துள்ளது ...
வானமே எல்லை என்று யார் சொன்னது ?
எல்லையில்லா வானத்தில்
இன்னமும் நீ பறந்து கொண்டுள்ளாயோ ?
பறப்பதற்கு ஒரு எல்லை இட்டு
என்னை பார்ப்பதற்கு நீ விரைந்து வா வா வா !!!

எழுதியவர் : paptamil (27-Mar-14, 11:21 am)
சேர்த்தது : paptamil
பார்வை : 87

மேலே