++காமெடி கீமெடி ஏதும் பண்ணலையே++

தேர்தல் பொதுக்கூட்டம்...

உச்சிவெயில் உடம்பைக்கிழிக்க...
ஏசிக்கு கீழே வேட்பாளர்.. ஓட்டு கேட்"பவர்"..
கொதிக்கும் வெயிலில் தொண்டர்... ஓட்டு கொடுப்"பவர்"..

கேட்"பவர்" கொடுப்"பவர்" இருவரிடமும் "பவர்" உண்டு... ஆனால் சரியாக உபயோகிப்"பவர்" யார்?

கொடுப்பவர் சரியாக கொடுக்க மறப்பதால் கேட்பவர் கேட்டது கிடைத்ததும் கொடுப்பவறை மறக்கிறார்.. அவர் மட்டும் குடும்பத்துடன் எங்கெங்கோ பறக்கிறார்..

வேட்பாளர் பேச வருகிறார்...

"மக்களே! மக்களே! (மனதிற்குள்: என் ஏமாந்த மக்களே!)
உங்களது எந்த பிரச்சனையை நான் தீர்த்து வைக்க..?
தண்ணீர் பிரச்சனையையா..! கண்ணீர் பிரச்சனையையா..!
மின்சார பிரச்சனையையா..! சம்சார பிரச்சனையையா..!
லஞ்ச பிரச்சனையையா..! கஞ்ச பிரச்சனையையா..!
வேலையில்லா பிரச்சனையையா..! வேலையில் இருந்தும் வேலை செய்யாதோர் பிரச்சனையையா..!
சொல்லுங்கள்.. மக்களே சொல்லுங்கள்!"

ஒரு தொண்டர் மெதுவாக எழுந்து வந்தார்...

காதுக்குள்ளே கிசுகிசுத்தார் வேட்பாளரின் அருகில் இருந்தவர் மேடையிலே..

"ஐயா! ஒரு தொண்டர் உங்கள பத்தி கொஞ்சம் புகழ்ந்து பேசனுமாம்.. கொஞ்சம் அனுமதி கேட்கிறார்.."

"அப்படியா.. கொஞ்சம் என்ன.. ரொம்பவே கொடுத்தர்லாம்..வாங்க வாங்க வாங்க தொண்டரே.."

"வேட்பாளர் ஐயா வணக்கம்..

நீங்க ஓட்டு போடுங்கன்னு சொல்லுங்க.. நாங்க ஓட்டு போட்டுர்றம்..
ஆனா அதச்செய்வேன் இதச்செய்வேனு சொல்லிட்டு அஞ்சு வருசத்துக்கு காணாம போயிர்ரீங்க பாருங்க.. அதத்தான் எங்களால தாங்கிக்கவே முடியல..
அதுனால இப்படி வீணா பேசி எங்க நேரத்த வீணடிக்காம இருந்தீங்கன்னா..கண்டிப்பா என் ஓட்டு உங்களுக்குத்தான் ..இப்ப சொல்லுங்க ஓட்டு வேணுமா.. இல்ல உங்க பேச்ச தொடர்ரீங்களா..?"

அமைதியாய் முகத்தில் கரி பூசிய தொண்டரைப் பார்த்து என்ன சொல்வது என தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தார் இந்த ஜன நாயக நாட்டின் ஒரு ஏமாற்றுக்காரர்.

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (29-Mar-14, 10:54 am)
பார்வை : 521

மேலே