கவிதை பூக்கள்

நீ செய்த சத்தியம்
நான் கொடுத்த முத்தம்
பலர் அறியா நம் காதல்
இவை அனைத்திற்குமான சாட்சியாய்
இப்பொழுதும் அங்கேயே நிற்கிறது
ஒற்றையாய் அந்த ஆலமரம்
————————————————————
ஒருபோதும் நினைத்தது இல்லை
இதுபோல நடக்கும் என்று
உனை பார்த்து செல்வதற்கு மட்டுமே
இங்கே காத்திருக்கிறேன் இப்பொழுது
தூரத்து கலங்கரை வெளிச்சம் கண்டு
கரை சேரும் பாய்மரம் போல..
————————————————————
எத்தனை முறை விலகி சென்றாலும்
ஈர்த்து கொண்டே இருக்கிறாய்
உன் விழி ஈர்ப்பு விசையால்
————————————————————
ஒற்றை வரி கவிதை
இது வரை எத்தனை முறை எழுதியிருப்பேன்
என்று நினைவில் இல்லை
ஆனாலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறேன்
உன் பெயர் எழுதுவதை
————————————————————
உனக்கு பிடிக்கும் என்று கூறியதால்
எனது கவிதை தருகிறேன்
எனக்கு பிடித்த உனது காதல்
கொஞ்சம் தந்து செல்.