உண்மையின் உருவம் நீ

ஒவ்வொரு விடியலிலும்
உன்னை சந்தித்து யார் நீ
என்ற வினாவோடு எந்தன்
துடக்கமது ஆரம்பமாகிறது
என்னை காட்டுகின்ற
கண்ணாடியே உன்னை நான்
உற்றுநோக்க எந்தன்
உள்ளத்தையும் சேர்த்தே நீ
காட்டுகிறாய் நான் பலநேரம்
உன்னில் என்னை ரசித்து
பார்த்தேன் சிலநேரம் என்னை
நானே வெருத்தொதிக்கினேன்
எவருன் முன் நின்றாலுமே நீ
என்றும் ஏளனம் செய்வதில்லை

ஏற்ற தாழ்வு என்பதிங்கு
உன்னிடமே இருக்கிறது
அழகும் அசிங்கமும் என்றும்
உன் ரசனையில்தான்னுள்ளது
என்று நீ நடாத்தும் உன்னத
பாடம் ஒளிப்படமாய் என்றும்
என்னில் நிலைத்து நிற்கிறது
உந்தன் கடமைதனை செய்
அதற்க்கு பலனை எதிர்பாராதே
என்ற சீரிய சிந்தனையை நீ
உணர்தும் விதம்உருக்குலைந்து
உடைந்து நீ விழுந்தாலும்
உள்ளதை காட்டும் உன் பணி
என்றும் நீ மறந்ததில்லை ,,,,

என்றும் உங்கள் அன்புடன்,,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (29-Mar-14, 1:30 pm)
Tanglish : unmaiyin uruvam nee
பார்வை : 81

மேலே