என்னடா வாழ்க்கை

கிடைத்தது வேண்டவில்லை
வேண்டியும் கிடைப்பதில்லை
கிடைக்கவும் வேண்டுமென்றால்
வேண்டவும் வேண்டுமடா,
இதுதான் வாழ்க்கையடா
வாழ்க்கை ஒரு பாடமடா
.....
இறந்தபின்னும் வாழுகிறான்
இறப்பதற்கும் வாழுகிறான்
நானென்று வாழ்தந்தவனோ
நலமின்றி வாழுகிறான்
இதுதான் வாழ்க்கையடா
வாழ்க்கை ஒரு பாடமடா
....
எடுத்தவனோ சென்றதில்லை
சென்றவனோ எடுத்ததில்லை
கொடுத்தவனோ புரிவதில்லை
புரிந்தவனோ கொடுப்பதில்லை.
இதுதான் வாழ்க்கையடா
வாழ்க்கை ஒரு பாடமடா.

எழுதியவர் : எம்ஸிஏ.பரித் (29-Mar-14, 4:23 pm)
சேர்த்தது : Mca Fareed
பார்வை : 139

மேலே