பலமிழந்துவிட்டோம்

​சேர்ந்திருந்தோம் பலமாயிருந்தோம்!
கூடிருந்தோம் குணமாயிருந்தோம்!

அன்பாயிருந்தோம் அரவணைத்திருந்தோம்!
ஒன்றாயிருந்தோம் துணிவாயிருந்தோம்!

பிரிந்துவிட்டோம் பலமிழந்துவிட்டோம்!!

ஒன்றுபட்டோம் களிப்படைந்தோம்!
ஒருமைப்பட்டோம் மகிழ்ச்சிப்பட்டோம்!

மனமொன்றுபட்டோம் மனமகிழ்ச்சிகொண்டோம்!
உறவு கொண்டோம் மனத் திருப்தி கொண்டோம்!

இரண்டுபட்டோம் துன்பப்பட்டோம்!!

உதவிடுவோம் நன்றாய்ப் பழகிடுவோம்!
கற்றிடுவோம் அறிவைப் பெற்றிடுவோம்!

அழைத்திடுவோம் கல்வி கற்பித்திடுவோம்!
ஆக்கிடுவோம் பொழிவாக்கிடுவோம்!

சோர்ந்திடுவோம் நாம் தோற்றிடுவோம்!!

வெறுத்திடுவோம் தீண்டாமை ஒழித்திடுவோம்!
அகற்றிடுவோம் ஏற்றத் தாழ்வை களைந்திடுவோம்

உயர்ந்திடுவோம் மனிதம் பெரிதென்றிடுவோம்!
பேசிடுவோம் இன் சொல் பேசிடுவோம்!

வன் சொல் பேசிவிட்டோம் வன்முறை துவங்கிவிட்டோம்!!

எழுதியவர் : ஜவ்ஹர் (29-Mar-14, 9:42 pm)
பார்வை : 269

மேலே