கற்றது கைமண்ணளவு- 02

கற்றது கைமண்ணளவு- 02

ஒவ்வொரு வீழ்ச்சியிலும் வருத்தத்தில் ஆழ்வதே வாடிக்கையாய் போகிறது மனதிற்கு. வருத்தத்தில் ஆழ்கையில் வாட்டம் தாளாத மனமோ அல்லது மற்றவர்களோ பரிவை வாரிவழங்குவர் பரிதாபத்தால். நமக்கு நாமே சமாதாதானம் சொல்வதும் சர்வ சதாரணமாய் நிகழ்கிறது இங்கு. இதுபோன்ற சூழலில் நம்மைச் சுற்றி ஓர் மாய உலகம் உருவாகிறது.அது நம்மை மேலும் சோகத்தில் சுகம் காணும் உலகிற்கு அழைத்து செல்கிறது .

ஆம்..! சோகத்தை மனதில் விதைக்கையில் தொடர் சோகங்கள் பரிசளிக்கப் படுகிறது. காரணம் சொல்லியே காலத்தை கழிப்பவர்களுக்கு மற்றவர்களின் நம்பிக்கையின்மை பரிசளிக்கப்படுகிறது. சோம்பலை சொத்தாக்கியவருக்கு சுகமின்மை பரிசளிக்கப்படுகிறது.

வீழ்ச்சியில் எழுச்சிகாண மனது பழகும் வரை வீழ்ச்சிக்கான காரணத்தை ஆழமாய் சிந்திக்கவும்,
அதுபோன்ற நிகழ்வை எதிர்கொள்ளும் மனபக்குவத்தையும் பெறமுயற்சிப்போம்.

வாழ்வாங்கு வாழ்க.!
வெற்றியோடு வளர்க..!!
உலகோர்மெச்ச உயர்க...!!!

எழுதியவர் : ஆரோக்யா (29-Mar-14, 10:09 pm)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 154

மேலே