மனதுடன்

உன்

கண்ணில்

மின்னும்

கவனம்,

தொடா

தூரம்

இருக்கும்

இருக்கை,

ஆடை

திருத்தும்

அவசரம்,

செய்திக்கு

முன் தலையாட்டல்,

உதடு பிதுக்கி

அபிநயம்,

ஆர்வ உபசரிப்பு,

போதிக்கும்

பக்குவம்,

வார்த்தையில்

முதிர்ச்சி,

வயதில்

குறைச்சு,

ஒரே சந்தோஷம்

நீயே என் தேசம்,

பாசத்தில் இல்லை

உன்னை போல்

பாவம் உனக்கு

நான்

தொல்லை போல்,

கோபமில்லா

காட்சி

உனை போல்

யாருமில்லை

என்பதே

என் சாட்சி,

எழுதியவர் : சபிரம் சபிரா (30-Mar-14, 1:09 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
Tanglish : manathudan
பார்வை : 49

மேலே