வெறுங் கூச்சல்,

வெறுங் கூச்சல்.

கருப்பு அயல் வங்கிகளில்
இருளில் ஏழை குடிசைகள்.
பாவம் ஜனநாயகம்.

புளிச்சேப்பம் பணக்காரனுக்கு.
பசியேப்பம் ஏழைக்கு.
சுதந்திரம் யாருக்கு?

பெட்டிப்பணம் தேர்தலில்
கொட்டுவது சீமான்கள்.
கூலிதான் ஏழைக்கு.

ஏழைக்கு ஏணி என்பான்
ஏறுவான் கொழுத்தவன்.
இதுதான் இந்தியா.

நாட்டுப் பற்று வாக்காளனுக்கு
வீட்டுப்பற்று வேட்பாளனுக்கு
ஒட்டுப்பற்று வரவுக்கு.

வரிச்சலுகை முதலாளிக்கு மொத்தமாய்.
வாக்குவங்கி ஏழைக்கு இலவசமாய்
வாக்கரிசி மட்டுமாய்.

வெறுங்கூச்சல் வேட்டிசேலைத் தேர்தலே
வந்து நீ கிழிப்பதென்ன வாழ்விலே
வெட்டிவேலை வேறென்ன ஏழைக்கு?


கொ.பெ.பி.அய்யா.


கரிசல் மண்ணில் ஒருகாவியம்////186723///////

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா (30-Mar-14, 7:41 am)
பார்வை : 187

மேலே