நீதி எங்கே

நான் சமர்ப்பிக்கும் இக்கவிதை பல நாட்கள் என் மனதில் எழுந்த கேள்விகளுக்கு நானே கூறிக் கொண்ட பதில்

கவிதை பின் வருமாறு

நீதி எங்கே?

ஒரு ஆணுக்கும்
ஒரு பெண்ணுக்கும்
உலகில் பிறந்து
உங்களைப் போல்
நானும் ஒரு சாச்சி தான்

கேலி
கிண்டல்
எங்கள் வாழ்வில் கிடைக்கும்
தினசரி பரிசு

உடலிலும்
உள்ளத்திலும்
பெற்ற மாற்றமே
எங்களுக்கு
கடவுள் கொடுத்த வரம்

நாங்கள் சுமப்பது
வெறும் உடல் அல்ல
தூய்மையான உயிர்....!
கலங்கம் இல்லாத மனது......!
பிறர் வாழ்வை கெடுக்க
நினைக்காத நினைப்பு ........!

பிச்சை கேட்போர்
என கேட்கும் நீ
ஒரு நொடி சிந்தித்து
எங்களுக்கு வேலையை கொடுத்துப் பார்
எங்களின் உழைப்பின் அருமை
என்னவென்று தெரியும்

வேசி
விபச்சாரி
என ஏசும் நீ
எங்கள் வாழ்வை
வாழ வேண்டாம்
நினைத்தாலே.....
நடைபிணம் ஆவாய்

சமூக நீதி
வாழ்க்கை நீதி
மனித நீதி
என எல்லாம் உள்ள ஊரில்

அரவாணியாய் பிறந்த பாவதிற்க்காக
நீதியை கொடுக்க ம(றை)றுக்கிறது
நீதி மன்றம்( உட்பட )................

எழுதியவர் : கண்மணி (31-Mar-14, 2:34 pm)
Tanglish : neethi engae
பார்வை : 456

மேலே