எனக்கெனப் பிறந்தவள்
பூங்காற்றும் திசை
மாறுகிறது ..
நீ ,சென்ற வழியில் !
நிறமிழந்த பூக்கள்
புதுப் பூவாகின்றன ..
உன் செஞ்சாந்து
கரங்கள் தீண்டியவுடன் !
இரவு நேர வானத்தின்
இருள் சாயத்தை
எடுத்துத் தீட்டுகிறாய் ..
கண்ணுக்கு மை என !!
தகதகக்கும் சூரியனுக்கும்
உனக்கும் போட்டி தான்
பகலில் ..
தங்க மஞ்சள் நிறத்துக்காக !!
உன் மலர் இமை
கண்டுதான் எத்தனை
பொறாமை ..இந்தப்
பூவிதழ்களுக்கு !!
உன் காலடியில்
நழுவும் தரையாகவோ
தலை மீது தவழும்
மேகங்களாகவோ
மாறிவிடத் துடிக்கிறேன் !
விழித் தீண்டிவிட்டால்
வென்று விட்டவனாவேன்
இந்த உலகினையே !!
அவள் பிரம்மனுக்குப்
பிறந்தவள்!இருந்தும்
என்னுயிர் பறித்தாள்..
ஒற்றைப் பார்வையிலேயே !!