காமராசர்
நம் உலகோ ஓர் நந்தவனம்
இதில் நிலைத்தே இவரது தீர அன்பு மனம்
மழையும் மடுவாகும் இவரின் நற்குணம் ஈர்த்து
குழந்தையும் புன்னகைக்கும் இவரின் புன்முகம் பார்த்து
காலைக் கதிரவனாக
மலரும் மொட்டுக்களாக
ராஜனுக்கும் ராஜனாக
சத்தியத்தின் பொருளாக
சுடர் ஒளியாக
மாற்றினீர் முற்கால மழலைகளை
தீர்த்தீர் மக்களின் கவலைகளை
பசித் தீ பரவிய வயிற்றுக்கு
உணவளித்து அணைத்தீர் இவ்வுலகிற்கு
இனிப்பாய் இனித்ததே உங்கள் பேச்சு
அதைக் கேட்டு சுகமானதே எங்கள் உயிர் மூச்சு
இவர் இறைவன் படைத்த ஓர் செல்லப் பிள்ளை
மானிடற்கு ஈடில்லா தெய்வப் பிள்ளை
நம் மனமோ பூக்கள் நிறைந்த சாலை
அதில் பயணிக்கிறார் ஓர் நினைவுப் பயணம்
மக்களின் உயிரைக் காப்பாற்றிய என் தந்தைக்கு
உயிராக இருக்க நினைக்கிறேன்
அவர் உடலோடு
அனால் என் துரதிஷ்ட நேரமோ
இப்பொழுது அவர் உயிரோடு இல்லை இவ்வையத்தில்
இனி மறுபடியும் பிறப்பார என்று கொஞ்சம்
ஏங்குதே என் சின்னஞ்சிறு நெஞ்சம்
மக்களின் வாழ்விற்கு ஒழி ஏற்ற
தன வாழ்க்கையைத் திய்யாகமாகினாரே
வார்த்தைகள் நிகராகுமா ?
அவரின் புகழிற்கு
பணம் ஈடாகுமா ?
அவரின் அன்பிற்கு
அவரின் உயிர்க்கு நிகராகுமா?
மக்களின் உயிர் .