என்ன சமூகமடா இது

என்ன சமூகமடா இது..?
கேள்வி எழ துவங்கியது என்னுள்..

வீர மங்கை வாழ்ந்த தேசம் இது...
இப்பொழுது மங்கை என்பவளுக்கும் மதிப்பில்லை,
திருநங்கை என்பவளும் மதிக்கப்படவில்லை...

தலைக்கனம் கொண்டு
செயல்படும் சில ஆண்வர்க்கம்...
அதனால் ஆண்வர்க்கம் முழுவதுமே
தலைகுனிந்து நிற்கும் அவலம் இங்கே...

சதைப்பிண்டங்களாய் பெண்களை பார்க்கும்
ஆண் சமுகம் உள்ளவரை
தலை குனிந்து தான் நிற்க வேண்டும் மொத்த சமூகமும்...

புன்னகைத்து அனுசரித்து பேசினால்
அதை அவதூறாக்கும் சிலர்..
முறைத்து ஒதுங்கி சென்றால்
திரவியத்திற்க்கு பலியாகும் பெண்கள் பலர்..

சில பெண்களும் சளித்தவளல்ல
இணையதளத்தில் ஒருவன்..
இதயத்தில் ஒருவன் என்று..
இரு வேறு ஒருவனுக்கு
காதல் செய்யும் கலாச்சாரம்...

தன்னவன் கண் மட்டும்
காணும் மெய் தனை
வீதி வீதியாய் காண்பித்து
விளம்பரபடுத்தலின்
பெயர் தான் நாகரிகமோ...?

தாய்மையில்லையேல் பெண்களுக்கு அழகில்லை
புவியில் பிறந்தும் பயனில்லை,
அப்படியிருந்தும் வீதிக்கு வீதி
அனாதை இல்லங்கள் ஏன்...?

நடமாடா கற்சிலைக்கு
கோவில் கட்டி காவல் போடும் அரசாங்கம்
நடமாடும் ஒரு அழகிய உயிர்
"பெண்"
அவளுக்கு பாதுகாப்பு தான் யாரோ...?

நம் நாட்டு
நம் இனத்து பெண்கள்
வேற்று நாட்டில் கற்பழிக்கப்பட்ட போதும்
செய்திகளாய் மட்டுமே
நம் செவிகளுக்கு எட்டின...

ஆனால் கிசிகிசு செய்திகளுக்கு மட்டும்
விமர்சனம் அனுப்பி
வாய் பிளந்து நிற்க்கிறோம்

கவர்ச்சிக்கும் காசுக்கும்
விற்றுப்போனதா என் தேசம்..
இவைகளை தாண்டி சிந்திக்க இயலாதா மனமே,..

புழு தின்னும் உடல் மீது ஆசையா..?
சுடுகாட்டிற்கு செல்..
அச்சடித்த காகிதத்தின் மேல் ஆசையா..?
கண் இமைக்கும் நேரத்தில்
உரிமை கொண்டாடிவிடுவான் இன்னொருவன்..

"நிரந்தரமற்ற ஆசைகளுக்கு
அலையும் சமுகத்தில்
நிரந்தர மாற்றம் வேண்டும்
வருமோ அந்த மாற்றம்"

எழுதியவர் : அரவிந்த் .C (2-Apr-14, 10:23 pm)
பார்வை : 138

மேலே