வாழ வழி சொல்லு

போட்ட வெத மொளக்கிலையே
====மண்ணுல ஈரம் நெலைக்கிலையே
பட்டத்துல வெதச்சோமே
====பருவமழ பேயிலையே !

காட்டுக்கோல ஊட்டக் கட்டி
====புள்ள குட்டி பாடு பட்டும்
கூழ் காய்ச்ச இரணம் இல்ல
====கும்பியும் நனையவில்ல!

வேலியும் காஞ்சு போச்சு
====வெள்ளாடும் மாஞ்சு போச்சு
புல்லுக்காடும் பொட்டலாச்சு
====ஆடு மாடும் செத்துப் போச்சு !

கால் வலிக்க பறிச்ச கோழிக்கு
====கா வயிறும் நெம்பல
நாள் பூராம் அலஞ்சதால அம்மணிக்கு
====மேல் வலிதான் மிச்ச மாச்சு !

காலுக்குள்ள தல வச்சு
====கம்முனு படுத்திருக்கு
கொரைக்க திராணி போயி
====கொலையொட்டி படுத்த நாயி !

கட்டுப்பட்ட காட்ட விட்டு
====பொட்டி கட்ட முடியல
காலணாவும் கையிலில்ல
====கட தேறத் தெரியல !

ஊழ் வினைன்னா இதுதான்னு
====ஊரு ஒலகம் சொல்லுது
பாழாப் போன எங்களுக்கு
====வாழ வழி என்ன ? சொல்லு !

எழுதியவர் : படைக்கவி பாகருதன் (2-Apr-14, 11:17 pm)
பார்வை : 268

மேலே