நீ மட்டும் போதும் அம்மா

தெருவிலே பல நூறு
அழகிகள் பாலாறு
என் முன்னே போனாலும்
உன் முகம் வீசும்
பொழிவு வருமா அம்மா ......

மல்லிகை மணர்த்தாலும்
முல்லை மலரும் மணர்த்தாலும்
உன் சேலை முகர்ந்து தூங்கும்
அந்த வாசம் வருடுது அம்மா......

எந்தன் ஸ்பரிசம் சுடுகையில்
உன் ஸ்பரிசத்தோடு என்னை அனைத்து
உச்சி முகர்ந்து எனக்கு தரும்
அந்த முத்தம் போதும் அம்மா ......

தேங்காய்ச்சில்லு நீ அரைத்து
மிளகாய்ச்சாறு அதில் நீ விட்டு
கொதிக்க கொதிக்க நீ சமைக்கும்
அந்த சாம்பாருதான் ருசிக்குது அம்மா .....

கோடி கோடியாய் உழைத்தாலும்
கோபுரத்தில் நான் வாழ்ந்தாலும்
உன் மடி சாய்ந்து நீ பாடும்
தாலாட்டு கேட்க மனம் ஏங்குது அம்மா......

இத்தனைக்கு நான் ஆசைப்பட்டு
இங்கு நான் இருக்கையிலே
எந்தன் வாழ்கை முக்கியமென்று
நீ எனக்கு கால்கட்டு போடுவது
எந்தவகையில் நியாயம் அம்மா ......

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (5-Apr-14, 5:42 pm)
பார்வை : 234

மேலே