மது

முதல் முறை
அந்த திராவகத்தின்
வாசம் அறிகிறேன்...

அந்த நாசமாய்ப்போன
நொடிகளை நோண்டிபோகிறேன்...

புளிப்பு நெடி,
வயிற்றை குமட்டும் உணர்வு...
மிருகங்கள் கூட தூர ஓடும் வாடை..

நன்றி மறக்கும் நண்பர்களின்
நச்சரிப்புகளால்
அந்த மதுச்சவக்குளிக்குள்
படுக்க சம்மதித்தேன்..

சற்றே நாக்கின் நரம்புகளுக்கு
சுருதி பூட்டினேன்...
சங்கீதக்கச்சேரி மூளையில்
அரங்கேறியது ..

திராவகம் தீர்த்தம் ஆனது..
ஒவ்வொரு துளியும்
உயிர்த்துளி ஆனது ..

வறண்ட மணலில்
விழுந்த பனிக்கட்டி ஆனேன் ...

நெஞ்சுக்குள் இருந்த
துயரங்கள்..
சொல்லாமல் போன சொந்தங்கள்...

எனக்கும் புட்டிகளுக்கும்
இரகசியமாய் திருமணமே ஆனது..

சொர்க்கம் ,,தினம் தினம்
என் இரவுகளில்..

சில இரவுகள் இரகசியமாய்..
பல இரவுகள் பார்வைக்காய்..

சுற்றுப்புரத்தைப்பற்றி
எவனாவது கவலைகொள்வானா?
நானும் கொள்ளவில்லை...

நான் இருக்கும் இடமே இல்லம்..
நான் படுக்கும் இடமே வீடு...

பலநாட்கள் ...பட்டினியோடு
ஆனால் புட்டிகளின் வயிற்றை
காலிசெய்யாமல் படுத்ததில்லை..

இன்று....

புட்டிகளின் வயிற்றெரிச்சல்
என் வயிற்றுக்குள்...

புட்டிகளில் எண்ணிகையை
எண்ணி பார்த்தவன் ...

என் வாழ்நாளை
எண்ணிகொண்டிருக்கிறேன்...

அருகே நண்பர்கள் இல்லை
அன்பான மனைவியோடு ...

ஒன்றும் புரியாதவனாய் க நிலவன்

எழுதியவர் : க நிலவன் (5-Apr-14, 5:50 pm)
சேர்த்தது : க நிலவன்
Tanglish : mathu
பார்வை : 80

மேலே