இறைவன் அறிவற்றவன்

அறிவற்றதுபதம் பற்றி சிந்தித்தேன்
பண்டிதன் ஒருவன் கண்பட்டான்
சர்வபதமும் சர்வதாத்பர்யமும்
யாரென நீ உணரென்றான்.

அப்பதமே யாருக்கிங்கு பொருந்துமென்றான்
அறிவற்றவன் யாரென்று உணர்ந்து
அறிவற்றவனிவன் வணங்கி நின்றான்
***************************************************************************
பொருள்:
1.அறிவற்றது என்ற வார்த்தை பற்றி சிந்தித்து இருந்தேன்
2.பண்டிதன் ஒருவனை கண்டேன்
3.அவன் சர்வபதமும் --(அணைத்து வார்த்தைகளும்)
இறைவனிடமிருந்தே அனைத்தும் தொடங்கிறது அனைத்து வார்த்தைகளும் இறைவன் தான். கல்லில் வாழ் இறைவன் சொல்லிலும் வாழ்கிறான்
சர்வதாத்பர்யமும்--(அனைத்து வார்த்தைகளுக்கு அர்த்தமும்) உலகில் மலர்ந்திருக்கும் அனைத்துமே இறைவன் அதன் பொருளுமே இறைவன் என்ற கூற்று உள்ள பொழுது அனைத்து வார்த்தைகளின் அர்த்தமும் அவனே எனவே அறிவற்ற பதம் அவனுக்கு பொருந்தும்.
4.இறைவன் என்ற பிரம்ம பொருள் நான்கு அந்த கரணங்களுள் ஒன்றான அறிவு என்ற கரணமில்லா பொருள்.பிரம்மம் கர்மத்தால் அறிவை பெற்றால் அது ஆத்மா ஆகிறது என்ற வாதத்தால் இறைவன் அறிவு தோன்ற காரணப் பொருள் அனால் அறிவற்ற பொருள்
4.யாரென நீ உணர முயற்சி செய் என்றான்
5. அந்த பதம் யாருக்கு பொருந்தும் என்றான்.6.அறிவற்றவன் யாரென்று உணர்ந்து
அறிவற்றவனிவன் வணங்கி நின்றான்
**************************************************************************
இந்த கவியை நிந்தா ஸ்துதி போல் அமைக்க முயரிசிதிருக்கிறேன்.அதாவது ஒரு பொருளை வைவது போல் துதி பது.தவறு இருப்ப்பின் மன்னிக்கவும்
***************************************************************************

எழுதியவர் : குருவருள்கவி (5-Apr-14, 10:21 pm)
பார்வை : 229

மேலே