உன் வார்த்தையின் வலிகள்

என்னவனே...

ஆறுதலான உன் வார்த்தைகளால்
உன்னுள் சரணடைத்தேன் மொத்தமாய்...

என் உண்மையான அன்பையும்
உணர்வுகளையும் முழுமையாய்
உணர்த்த என்னவன் நீ என எண்ணினேன்...

உன் மீது நான் கொண்ட காதல்
பொய் என நீ கூறிய தருணங்களில்
அந்த நொடியே இப்பிறவியை
முடித்து கொள்ள விரும்புகிறேன்...

உன் வார்த்தையின் வலிகளை
கண்ணீரால் கரைக்க முடியவில்லை...

படித்து நான் பெற்ற பட்டத்தை
விட நீ தந்து சென்ற பட்டம்
என்னை உன் வார்த்தைகளால்
கொன்றுவிட்டது....

என்னால் உன் குடும்ப பெயர்
களங்கப்படும் என நீ எண்ணினால்
மன்னித்துவிடு...

உன் மனம் போல் மங்கையை
மணத்துக்கொள்....

சந்தோசமாக வாழ்த்துகிறேன்...

சொல்ல தெரியவில்லை...
உன் வார்த்தைகளால் உண்டான
வலிகளின் காயங்களை....

எழுதியவர் : சகி (6-Apr-14, 10:01 am)
பார்வை : 705

மேலே