எங்கள் வாழ்வின் சர்க்கரை

ஈரக்குளிர் காற்று பட்டு
தளிர்மேனி சிலிர்க்கும்
பாத குழம்புகளுக்குள் கடல்
மண்துகள்கள் கவி பாடும்

நண்டுகளோடு ஓட்டப்போட்டி
நடக்கும் முடிவில்
நண்டுகள் தோற்கும்

கிளிஞ்சல்கள் போட்டிபோட்டு
பொறுக்கியெடுத்து ரசிக்கப்படும்
மணியாக கழுத்திலும்
பொம்மைகளாக கையிலும் தவழும்

எங்களின் சப்தத்திற்கு முன்
அலைகளின் சப்தம் அமைதியாகும்
கடலலைகள் வேகமாக எங்கள்
பாதம் தொட ஓடி வந்து ஏமாந்து போகும்

எங்களின் குறும்பு விளையாட்டை
மேகங்கள் ஒன்று கூடி அமர்ந்து ரசிக்கும்
கடலில் நாங்கள் குளியல் போட
நடுகடல் நீரும் தேடி ஓடி வரும்

ஞாயிறு என்று வருமென கடலும்
எங்கள் வரவை காண காத்திருக்கும்
நாங்கள் பேசுவதை கேட்டிட பறவைகள் வட்டமிட்டு முடியாமல் சோர்வடையும்

என்றும் காணப்படும் காடம்பாடி
கடற்கரை நீங்கா நினைவில்
எங்கள் வாழ்வின் சர்க்கரை
...கவியாழினிசரண்யா...

எழுதியவர் : கவியாழினிசரண்யா (6-Apr-14, 11:09 am)
பார்வை : 310

மேலே