61 எதிர்செயல் என்பது நம் கையில்

சொந்தக் கவிதை - 61
எதிர்செயல் என்பது நம் கையில்

எரிகின்ற நெருப்பிற்குத் தெரியாது
பட்டுப்புடவையின் மதிப்பு
பட்டுப்புடவை நூல்புடவை எல்லாமதற்கு ஒன்றுதான்

கொதிக்கின்ற நீருக்குத் தெரியாது
பிஞ்சுக்குழந்தையின் மென்மை
குழந்தை காய்கறி எல்லாமதற்கு ஒன்றுதான்

விழுகின்ற மழைத்துளிக்குத் தெரியாது
குடிநீரின் சுவை
குடிநீர் சாக்கடை எல்லாமதற்கு ஒன்றுதான்

அடிக்கின்ற புயலுக்குத் தெரியாது
நந்தவனந்தின் அழகு
நந்தவனம் பாலைவனம் எல்லாமதற்கு ஒன்றுதான்

சீறிவரும் வெள்ளப்பெருக்கிற்குத் தெரியாது
வீடுதரும் பாதுகாப்பு
வீடு காடு எல்லாமதற்கு ஒன்றுதான்

வீசப்படும் திராவகத்திற்குத் தெரியாது
பெண்ணின் அழகியமுகம்
பெண் பொருள் எல்லாமதற்கு ஒன்றுதான்

கோபத்தில் தெறிக்கும் வார்த்தைக்குத் தெரியாது
மனிதஉள்ளத்தில் ஏற்படும்வடு
மனிதன் மிருகம் எல்லாமதற்கு ஒன்றுதான்

ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும்
எல்லாசெயலும் சமமான எதிர்செயலை ஏற்ப்படுத்தும்
என்றாலும் செயலுக்கும் எதிர்செயலுக்கும் சிறியஇடைவெளியுண்டு
எந்த எதிர்செயல் என்பது நம் கையில்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (6-Apr-14, 12:22 pm)
பார்வை : 79

மேலே