சொற்கள் இல்லாத உரையாடல்கள்

விழிகளுக்கு ஆனந்தம் கொடுத்தபடி
விழுகிறது இங்கே ஒரு பெயர் தெரியாத சருகு...

மலரா இது ? இல்லை வாழ்க்கையை
மகிழ்ச்சியாக கொண்டாடிய ஒரு மனது....

இதற்கு சுடுகாடும் சுற்றுலா
இடுகாடும் சூப்பர்லா....!!

யாரும் கவலைப் படப் போவதில்லை
இப்போது இது உதிர்ந்து கொண்டிருப்பதைப் பற்றி...

எனக்கும் அதற்கும் மட்டும் புரியும் - இது
எப்போதும் நிறைவோடு இருப்பவர்களின்
எளிமையான மவுன மொழி என்று........

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (8-Apr-14, 6:01 am)
பார்வை : 58

மேலே