முதல் விழி பார்வை

முகமறியா ....
முகவரிகள் விசாரிக்கப்பட்டு
இரு விழி பார்வையுடன்
பகிர்ந்துக்கொள்ளப்பட்டன ....

பகலெல்லாம் பரவசம்!
தனிமையில் உற்சாகம்!!

புன்னகையைப் புலப்படுத்த
புகைப்படங்கள் ஏற்றுமதி....

விழி ஆனந்த நீராட
பார்வை கவிபாட
விழி பார்வை கூடிய வேளை
பிரிவு துன்பம் மிகும் மாலை....

விழி விடை பெற நினைக்க
பார்வை பதட்டத்தில் தவிக்க ....
முதல் விழி பார்வை முடிந்தது ...
(அறிவர் அறிவார் )

எழுதியவர் : பார்வைதாசன் (8-Apr-14, 2:05 pm)
பார்வை : 77

மேலே