என்னால் எழுதித்தீர்க்கப்படாத ஒரு கதையிலிருந்து

என்னால் எழுதித்தீர்க்கப்படாத ஒரு கதையிலிருந்து
(கடிதப்பதிவு)

ஒரு டெலிபோன்
இறக்கின்ற அச்சமயம்
விழித்தெழுப்பிய வரிகள் இவை

நிர்மூலத்தின் கடமையென
மோகிக்காமல்
வழுக்கி நடந்தவர்கள் இவர்கள்

கேட்கக்கூடாத
இரகசியங்களெல்லாம்
அபஸ்வரம்போல
பின்தொடர்கின்ற
டெலிபோன் சப்தங்களில்சுருங்கி
தைரியமெங்கேயோ சோர்ந்துபோகிறது

நிற்கக்காத்திருக்கின்ற
இக்கடிகாரத்தின்
கடைசிக்கட்டத்தில் நின்று
சொல்லித்தீர்த்துவிடுகிறேனே
அர்த்தமில்லாத
நிறைய காரியங்களை

இடையில் எப்பொழுதாவது
அந்த டெலிபோன்
சப்திக்கத் தொடங்குமென்றால்
பொறுத்திடு
அதையினியும் எடுக்கின்ற அவசரம்
நீயென் கண்களில் கண்டிருக்கலாம்

எனக்கானவளாக மாறிட
உன்னை
நிர்பந்தித்தவர்களையெல்லாம்
இத்தனைக்
காலங்களுக்கிடையில்
எத்தனைமுறை சபித்திருப்பாய்
அழகான
மற்றொரு வாழ்வு
உனக்காய் காத்திருந்தது
உனக்கொரு
நல்ல கணவனும்
உன் குழந்தைகளுக்கொரு
நல்ல தந்தனுமாய் மற்றொருவன்

உன் ரூபமின்று
இதுவாயில்லாமலிருக்கலாம்
என் எல்லா
துர்காரியங்களுக்கும் முன்னில்
சிரித்து சிரித்து
உனக்கு வரம்பில்லா வயதாகியிருக்கலாம்

என்னை
நானாக்குகின்ற முயற்சிகளில்
உன்னோடு
தவறுகள் செய்ததாக
என்னவோ எனக்கு தெரியவில்லை

“அப்படியும்
நான் செய்தவை எல்லாம்
தவறுகளாகவே
இருந்தால் போலும்
உனக்கு
எப்போது வேண்டுமென்றாலும்
என்னிலிருந்து
தப்பிச் சென்றிருக்கலாந்தானே??”
என்றத்தோணலின்
காரணங்களைத்தான்
தேடியெடுத்திருந்தது
என் மனம் அன்றெல்லாம்

ஆனால் இனி
இப்போதிந்த வலி
என்னை உன்னறையின்
கட்டிற்காலில்
கட்டியிருத்திடத் தொடங்கியபோது
என் குற்ற போதங்களெல்லாம்
ஒவ்வொன்றாக
உணர்ந்து வெளிப்படுகின்றன

உன்முன்னால்
என் எண்ணங்கள் குறுகி
முடிவில்
ஏதுமில்லாததாகிமாற
என்னில் முடியாதடி
என்னையும்
நான் செய்த பாவங்களையும்
நன்கறிந்தவள் நீ

எனக்கினி
அற்றாமற்போய்விடு நீ
என்னைக் கண்டுங் காணாமல் நடிக்க,
நேருக்குநேராக உதறித்தள்ள,
ஒரு சமயத்தில்
உன்னை நிரூபிக்கச்செய்கின்ற,
நீ சொல்லும்
அத்தனைக் காரணங்களையும்
நான் ஏற்றுக்கொள்ளப்
போவதில்லை என
உன்னால்
முடிவாக கூறிவிட முடியுமா ??

மீண்டும் உன்னோடு நானென்
அவஷியங்களையே
விதைக்கிறேன் பார்த்தாயா !!
என்றால்
ஆண்களுக்குள் இருக்கின்ற
இந்த குரூர செல்கள்
என்றுமே மரிப்பதில்லை
என்பதல்லவா
அதிசயமான உண்மையாகிறது ம்ம்ம்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (8-Apr-14, 3:06 pm)
பார்வை : 86

மேலே