எதிர்பாராதக் காதல்

நீயும்
நானும் அருகருகே அமர்ந்திருந்தோம் நமக்கிடையில் காதலும்
காதலுக்கு இடையூராக இருவரும் ....

நம் இருவர் விழியும்
நிமிடத்திற்க்கொருமுறை
இணைந்துக்கொண்டன .....

அந்தவழியே வந்த
ஒரு வியாபாரக்கார அம்மாவின்
கையில் இருந்த குழந்தைகள் ஆடையின் மீது
நம் இருவர் விழியும் சங்கமித்தன....

நாம் அமர்ந்திருப்பது
ஓர் பிள்ளைபேறு மருத்துவமனை
என் உறவினருக்காக நானும்
உன் உறவினருக்காக நீயும் வந்திருக்கிறோம்....

நிமிடத்திற்கு ஒரு முறை
மோதிக்கொள்ளும் விழிகளின் கோரிக்கை இருவருக்கும் மெல்ல மெல்ல
புரிய ஆரம்பித்தது.....

இதமாக
உன் இதழ் புன்முறுவல் பூக்க...
எனக்கும் அப்படியே பூத்தது புன்சிரிப்பூ...

உன் கூந்தலை
அவிழ்த்துவிட்டபடியே
என்னைப் பார்த்தாய்...
மெல்லக் கோதிவிட்டாய்
உள்ளம் சிலிர்த்தப்படியே
உற்றுநோக்கினேன்.....
சிந்திய உன் ஓரிழை முடியில் அல்லவா
என்காதல் முடியப்பட்டது....

மோதிக்கொண்ட விழிகள்
சிறிது ஓய்வுக் கொண்டன....
கள்ளத்தனம் செய்த உணர்வை ஒத்த நடுக்கம்
உள்ளுக்குள் ஏற்ப்படத் தொடங்கிற்று .......

எழுதியவர் : பார்வைதாசன் (9-Apr-14, 12:04 pm)
பார்வை : 87

மேலே