ஆடாதே நீயும் ஆடாதே

இரு ஊன்றுகோல்
ஒரு வழிப்பயணம்
இதுதான் என் வாழ்கை

மரக்கட்டையால் ஆன
இரு கால்கள்
மறத்துப்போன வாழ்கை
இதுதான் என் நிஜம்

மராத்தான் ஓட எனக்கும் ஆசை
மதில் தாண்டி மாங்காவும்
பறிக்க எனக்கு ஆசை
ஆனால்
என் விதியால் நானும்
இங்கு தவிக்கின்றேன்

மோட்டார் சைக்கிளின்
இரு சக்கரங்களை
காற்றில் செலுத்தியவன் நான்
சூப்பர் ஸ்டார் வருமுன்னே
தியேட்டரில் துள்ளிக் குதித்தவன் நான்

ஆட்டம் போட்டப்போது நானும்
என்னை
ஆண்டவனாய் நினைத்தேன்
என் ஆட்டத்திற்கு இறைவன் போட்ட
தடுப்பில் நானும் மாட்டி
கால்கள் இழந்தேன்

இன்று எனக்கு புரிகிறது
வாழ்கையின் தத்துவம்
இறைவன் எம்மை ஆட விடுவது
எம்மை பின் ஆட்டி படைக்கவே

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (13-Apr-14, 1:10 pm)
பார்வை : 109

மேலே