பிடிக்கும்

பிடிக்கும்

தாய் பிடிக்கும் எனக்கு
என் மேல் பாசத்தை பொழிவதால்

தந்தை பிடிக்கும் எனக்கு
என் மேல் அக்கறை பொழிவதால்

நட்பு பிடிக்கும் எனக்கு
என்னை வழிநடத்திச் செல்வதால்

இயற்கை பிடிக்கும் எனக்கு
புத்துனர்ச்சியை தருவதால்

காதல் பிடிக்கும் எனக்கு
என்னில் மாற்றங்களை உருவாக்குவதால்

மழலை பிடிக்கும் எனக்கு
என்னில் சோகத்தை தீர்ப்பதால்

மவுனமும் பிடிக்கும் எனக்கு
அது உன்னிடம் நிலையாய் உள்ளதால்

காத்திருப்பும் பிடிக்கும் எனக்கு
உனக்காக காத்திருப்பதால்........................................

எழுதியவர் : விநாயகபாரதி.மு (13-Apr-14, 2:52 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : pidikum
பார்வை : 144

மேலே