ஒரு ஓவியனின் தூரிகை

எண்ணங்களை
எழுத்தில் பிரதிபலிப்பான்
- கவிஞன்
எண்ணங்களை
தூரிகையால் பிரதிபலிப்பான்
-ஓவியன்

பேசாத சித்திரமும்
பேசும் இவன் வண்ணங்களினால் ..

உயிர் கொடுத்த ஓவியன்
மறைந்தாலும்
அழியா ஓவியமாய்
இவன் ஓவியங்கள் ......

காற்றில் அலை மோதும்
கற்பனா சக்தியை
கண் முன் குவித்து
கலைக்கு மெருகு ஊட்டுபவன்

கற்பனைகளை
கனவுகளை
நனவக்குவான் கன நேரத்தில்
சித்திரத்தில்

உறக்கம் துறப்பான்
உன்னதமான படைப்பிற்கு

நினைத்ததை முடிக்கும்
நிபுணன்

பொறுமை இவனது
பெற்றோர்கள் ..

நிதானம் இவன்
உறவினர்கள் ...

மௌனம் இவன்
தாய் மொழி இவன்
பேசுவதோ தூரிகை மொழி ......

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (13-Apr-14, 4:06 pm)
பார்வை : 115

மேலே