நான் தேடும் செவந்தி பூவிது

கவிதை! கவிதை! கவிதை!
நான் இன்னும் அறியவில்லை
எண்ணிய எண்ணம்எழுத்தாய் மாறி
எமக்கே படிக்கும் தாலாட்டு...!

திண்ணிய எண்ணமும்
உனை திருத்திடும் வரியும்
உனை உசுப்பும் கவியை
படைத்திடும் திறனும் எமக்கில்லை...!

மண்ணில் சில புல்லுருவி வேறூன்றி
என்னுள் தோன்றும் சிந்தையை
சிதைத்து சிதையில் தீமூட்டுது
எண்ணிலடங்கா ஞானிகள் முன்னே
என்னில் புதைந்த வரிகளை நான் தேடி ...

சிந்தையை தினம் நொந்து
வந்து போகிறேன் வரியொடு வறியாய்
பெருமை தேடும் உலகினிலே
பெருந்தன்மையை நான் தேட...

நவநாயகன் நவராத்திரி போல்
இங்கும் சிலறிருக்க என்கவி
சிறந்திட வழியேது!u
அன்பில் வழியும் காதல்
வழிமாறி பணத்தை தேடிட ...

அங்ககீனம் கொண்டவள் மனம்
கடைந்தேற வழியேது!
எங்கோ ஒருவனிருப்பானென
ஏக்கத்துடனே தினம் நாள் கழித்து
நானும் அதுபோல் கவி படைத்தேன்...!

சங்குகழுத்தை தேடும் மானுடனே
இறுதிச் சங்கை ஏன் மறந்தாய்!
விம்மி விம்மி நீ அழுதாலும்
மாண்டவர் மீண்டு வருவாரோ!

இருக்கும் போது அறியாதுலகு!
இயற்கையும் நானும் அதுபோல
காலம் கனியக் காத்திருக்கோம்!

எழுதியவர் : கனகரத்தினம் (13-Apr-14, 4:27 pm)
பார்வை : 132

மேலே