ஊழல்

கனவில் வந்தாலும் அதனை கண்டு கண் விழித்தஉரக்க த்தை. தொலைத்தவானானேன்...

பாய்ந்தோடும் உதிரமின்றி படபடக்கும் இதயமின்றி,எந்த ஒரு செயலுறும் புலனுருப்பின்றி உயிரில்லாமல், உருவமின்றி வெகுவிரைவாக வளர்ந்து வரும் ஒரு பெரிய ஆபத்து ....

இதனை அழிக்க சபதம் எடுத்து வரும் மானிடர்கள். இதன் இனங்காண இரைபசிக்கு இதனடிமையாகின்றனர்... இதன் ஆதிக்கம் குண்டூசி யில் நுழைந்து கோடி ரூபாய் வைரம் வழியாக வழிந்தோடும் ஒரு அசூர அமிலம் இது...

இதன்மூலம் பெறப்பட்ட பணமானது ஒரு புதிய நிரம் கொண்ட பெயராக "கருப்பு பணம் " என் பொருள் கொண்டு யாருக்கும் உதவாமல் உடல் சோம்பலுற்று , ஒய்யரமாய் உரங்குகிறது அன்னிய வங்கி தொட்டிலில்...!

நாட்டினை செம்மையுறச் செய்ய ,பல் நதிகள் பாய்ந்தோடி சேவை செய்கிறது. ஆனால் இந்த மூன்றெழுத்து சாக்கடை. ஒவ்வொரு முச்சந்தியிலும். முக்காலிட்டு அமர்ந்து கொண்டு அழிவை உண்டாக்குகிறது....

நம் ஜனநாயக தராசின் ஒருபுறம் மக்களின் நம்பிக்கை வீற்றிருக்க ,மறுபுறம் இந்த மரணபேய் குடியிருக்க வெற்றி இந்த அசூரன் பக்கந்தான்..


.இப்படி நம்மவர்களின் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு. செயலிலும் ,இந்த விசச்செடி வேரூன்றியிருக்க,இதனை அறுக்க ஆயுதம் ஏந்திய நிலை இன்று நம்முள் எழுந்துள்ளது ... வீருநடை போட்டு செல்வோம் !விஷத்தின் வேரினை அறுத்து தீயின் பசிக்கு இரையாக்குவோம்...

"உன் பெயரை உமிழ்நீர் கலந்த நாவால் உரைக்கிறது மனமில்லாமல் உரைந்து நிற்கிறேன் "வருத்ததுடன் ...

எழுதியவர் : சத்தியராஜ் (14-Apr-14, 11:21 am)
சேர்த்தது : R.SATHYARAJ
Tanglish : oozhal
பார்வை : 100

மேலே