=== புது வாழ்வு தருக ===

வெண்ணிற சூரிய ஆடை கலைத்து
நீலமேக வண்ண ஆடை அணிந்து

களவு சூது நோய் பொறாமை தீயஎண்ணம்
நீக்கி நல்லெண்ணங்கள் வளர்த்திட

இயற்கைசெயற்கை இணைந்து வழிநடத்திட
மறையும் பசுமைதனை மீண்டும் புத்துயிராக்கிட

பருந்தென பழிவாங்கும் எண்ணம் மறந்து நாடுகளிடையே சமாதானப்புறா பறந்திட

ஆள்பவர்களும் வாழ்பவர்களும் சிந்தித்து
செம்மை நெறியோடு வாழ்வை வாழ்ந்திட

அன்பென்ற ஒன்றே இவ்வுலகெங்கும் நிறைந்திட
மக்களெல்லாம் நிம்மதியாய் துயில் கொள்ள

ஜய வருடத்தில் சித்தைரை மகளே வருக!
மக்கள் அனைவருக்கும் புது வாழ்வு தருக !

(தளத்திற்கும் தளத்தின் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் )

...கவியாழினிசரண்யா...

எழுதியவர் : கவியாழினிசரண்யா (14-Apr-14, 3:21 pm)
பார்வை : 125

மேலே