காதல் ஆசை

இதுவரை அர்த்தம் தெரியாத ஒரு வார்த்தை..
இன்று முழுமையாய் அறிந்தேன்,
நான் உன்னை பிரிந்ததால்!

ஒவ்வொரு நொடியிலும் உன் பிம்பங்கள் மட்டுமே.. என் கனவிலும் கருத்திலும்!

சுவாசிக்கப் பிடிக்கவில்லை,
காற்றில் உன் ஸ்பரிசங்கள் இல்லாததால்!
கண்திறக்க பிடிக்கவில்லை,
நீ என் விழித்திரையில் விழாததால்!

பிரிவை சொல்ல வார்த்தைகள் தேடினேன்..
ஆனால், கண்ணீர் மட்டுமே வந்தது..
என் கடைசி வார்த்தையாய்!

என் காதல், விண்ணில் எரியும் சூரியன் போல..
உன் பிரிவில் கூட எதிர்த்திசையில் சுடர்விட்டு கொண்டிருக்கும்! இருந்தும்,
என் நிழலும், இன்று உன் முகம் காட்டுகின்றது!

உன் முத்தத்தின் ஸ்பரிசம் மட்டும் என்னை சுற்ற, தனிமயில் உலவுகிறேன்..
உன் நினைவுகளுடன்!

என் கன்னம் பதிக்க, உன் கைகள் இல்லை,
என் முகம் சாய்க்க, உன் தோள்கள் இல்லை, இருந்தும்,
உன் நிழற்படம் மட்டும் தலையணைக்குள்ளே
என் தலைகோதி, உன் காதலை நினைவு படுத்தும்!

உன் இமைகள் துடிக்கும் காலம் மட்டும்
என் இதயம் இங்கே துடித்துக்கொண்டிருக்கும்!
ஆம்..!!
உன் மார்பில் முகம் புதைக்க,
உன் தோளில் என் தலை சாய்க்க, நித்தம் நித்தம்
உன் முத்த மழையில் நனைந்திட, கிறங்கி பார்க்கும்
உன் பார்வைக்காக........
உன் இமைகள் துடிக்கும் காலம் வரை,
என் இதையமும் இங்கே துடித்துகொண்டிருகும்!

ஒரு முறை உன் முகம் பார்த்து விட்டால் போதும்..
இனி செத்து போகச் சொன்னால் கூட..
உன் கண் பார்த்துக்கொண்டே மடிவேனடா..!!!

எழுதியவர் : சுதா ஆர் (16-Apr-14, 11:56 am)
Tanglish : kaadhal aasai
பார்வை : 155

மேலே