நீ இல்லா நான்

பச்சை மெத்தை மீது
கொஞ்சம் இச்சை சேர்த்து
உன்னை நானும் கொஞ்சி குலாவும்
அந்த நாள் எங்கே

பட்ட பகலில்
அந்த மொட்டை மாடியில்
உன்னை கட்டி தழுவும்
அந்த நேரம் எங்கே

இரவில் மெல்ல
உன் இடையில் கிள்ள
நீ நாணிப் போகும்
அந்த தருணம் எங்கே

சாலையில் நீயும் செல்ல
உன் நிழலாய் நானும் தொடர
நீ ஓரப்பார்வையால் என்னை முறைக்கும்
அந்த வினாடி எங்கே

என் மடியில் நீயும்
உன் இதழில் என் இதழும்
ஒட்டி உரசி
உஷ்ணம் ஏற்றும்
அந்த நிமிடங்கள் எங்கே

இத்தனையும் என் நினைவில் இருக்க
என் நிழலாய் உன்னை நினைக்க
உயிரே என்னை பிரிந்ததேன்
என்னை உயிரோடு கொல்லுவதேன்

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (17-Apr-14, 7:09 pm)
Tanglish : nee illaa naan
பார்வை : 137

மேலே