பத்தில் உனக்கு தெரிந்தது எத்தனை …

இது பெண்களுக்கான விஷயம் மட்டுமல்ல. ஆண்களும் சற்றே தெரிந்து கொள்ளவேண்டிய விசயமும் தான்.

ஒரு பெண் தான் கருவுற்ற நாளில் இருந்து குழந்தையை பிரசவிக்கும் நாள் வரை அந்த பெண்ணின் கருவறையில் நிகழும் கரு உருமாற்றம் பற்றி ஒரு சில குறிப்புகள்.

பெண்ணானவள் தனது கருவறையில் நிகழும் மாற்றங்களை நன்கு உணர முடியும். அதனை ஆண்கள் படித்து தெரிந்துகொள்ளவதில் தவறே இல்லை. அட…சும்மா வாங்க, அந்த பத்து மாதங்களில் அப்படி என்ன தான் நடக்குதுன்னு கேட்போம்.

ஒன்றாம் மாதம்
பதியமாகும் கரு, கருப்பை சுவர்களில் பற்றி பிடித்து வளரும். சிசு மூன்று பாகங்களாக தெரியும்.

முதல் பாகம் : மூளை, நரம்பு மண்டலம், சருமம், கண், காது போன்றவகைளாக மாறியது.

இரண்டாம் பாகம் : சுவாச கட்டமைப்பு, வயிறு வளர்ச்சியடைய தொடங்கியது. மூன்றாம் பாகம் : இருதயம், ரத்தம், தசை, எலும்பாக மாறியது.

இரண்டாம் மாதம்
சிசுவின் முகம் உருவாகிறது. கண் பகுதியில் குழி தோன்றுகிறது. மூளை, இருதயம், சுவாச பகுதி, கிட்னி போன்ற உள் உறுப்புகளின் வளர்ச்சி தொடங்கும். இருதயம் மெல்ல செயல்பட தொடங்கும்.

மூன்றாம் மாதம்
உடலைவிட இப்போது தலை பெரிதாக இருக்கும். நெஞ்சு பகுதி மெல்ல துடித்துகொண்டிருக்கும். அல்ட்ரா சவுண்ட் கருவி கொண்டு சப்தத்தை கேட்கலாம்.

நான்காம் மாதம்
தலைமுடி, புருவம் போன்றவைகள் லேசாக வளர்த்திருக்கும். கண்கள் மூடியிருக்கும்.

ஐத்தாம் மாதம்
சிசுவின் அசைவை தாய் முதல் முறையாக உணர்வார். ‘லாலுனுகூ’ என்ற மென்மையான ரோமங்களால் சிசுவின் உடல் மூடியிருக்கும். பிரசவத்திற்கு முன்பு அந்த ரோம கட்டமைப்பு மறைத்து போய்விடும்.

ஆறாம் மாதம்
சிசுவின் உடல் கிட்டதட்ட முழுமையடைந்து குழந்தையாக உருவாகும். சருமம் கெட்டியாகும். வெள்ளை கிரீஸ் போலத் தோன்றும் ‘வெர் நிக்கஸ்’ குழந்தையை பாதுகாப்பாய் மூடியிருக்கும். ‘ஆம்நீயாடிக்’ திரவத்தில் இருந்து குழந்தை தனக்கு தேவையான சத்துக்களை பெரும். குழந்தையின் விக்களை அம்மாவால் அறிந்து கொள்ள முடியும்.

ஏழாம் மாதம்
குழந்தை கண் திறக்கும். எடை கிட்டதட்ட ஒரு கிலோ இருக்கும்.

எட்டாம் மாதம்
நகம் வளரும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கருப்பை வாயில் நோக்கி தலைகீழாக குழந்தை செல்லும்.

ஒன்பதாம் மாதம்
ஈரல், கிட்னி போன்றவை வேகமாக செயல்படும். எட்டு முதல் பத்து தடவை குழந்தையின் அசைவு தெரியும்.

பத்தாம் மாதம்
பிரசவத்திக்கு தயாராகும் நிலை உருவாக்கும்.

எழுதியவர் : நன்றி : டாக்டர். கே.எஸ். ஜெய (18-Apr-14, 5:36 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 203

மேலே